சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

6000

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அண்மையில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கபப்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தொகை ஒரு தவணைக்கு ரூ.2000 வீதம் மூன்று தவணைகளாக ஓராண்டுக்கு வழங்கப்படும் எனவும், அது நேரிடையாக பயன்பெறும் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்படும் என்றும், இந்த திட்டம் நடப்பு ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்காக ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டிற்காக உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உத்திரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு ரூ.6000 கோடி வழங்கும் திட்டத்தை தொடங்கினார். முதல் தவணைத் தொகை ரூ.2000 -ஐ பிரதமர் மோடி நேரிடையாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தினார். இந்த விழாவில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விவசாய நலத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.