டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர்  மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு 144  தடை போடப்பட்டு உள்ளது. பல மாநிலகளிலும் பகுதி நேர  லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா  கொரோனா பரவல் விகிதம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி, அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன்  காணொளி காட்சி மூலம் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்க உள்ளார்.