டெல்லி:

பிரேசிலில் நடைபெறும் 11வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்.

பிரிக்ஸ் நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாடு நடப்பாண்டில், வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசிலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாநாட்டில் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும்  கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். இதில் கலந்துகொள்ளும் வகையில் பிரதமர் மோடி வரும்  இன்று பிரேசில் பயணமாகிறார்.

புதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மேலுர்,  தற்கால சூழலில் நாடுகளின் இறையாண்மையை காப்பதற்கான வாய்ப்புகள், சவால்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது.

மாநாட்டியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்குரஷ்ய அதிபர் புதின்,சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே சந்திந்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.