டெல்லி:

ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ள நிலையில், ராமர் கோவிலுக்கு இன்று சொந்தம் கொண்டாடுபவர்கள் 2010 முதல் 2017வரை எங்கே போயிருந்தார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கேள்வி விடுத்துள்ளார்.

அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியும் ஒருவர். தற்போது ராமஜென்மபூமி வழக்கில், உச்சநீதி மன்ற அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, ராமஜென்ம பூமி இந்துக்களுக்கே சொந்தம் என்றும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட வேறு இடத்தை ஒதுக்க உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், ராமர்கோவில் கட்டுவது தொடர்பாக பாஜகவினர், இந்து அமைப்புகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இப்போது, ராமர்கோவில் வழக்கில் இப்போது, ஆதாயம் பெற விரும்புபவர்கள் அனைவரும், கடந்த 2010 முதல் 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்டக்காலங்களில் எங்கே போயிருந்தார்கள்… என்று கேள்வி விடுத்துள்ளார்.

மேலும், விதைகளை பயிரிடாமல் பயிர் வருவாயை ஜமின்தார்கள் எப்படி பெற முடியும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தற்போது ராமர்கோவில் விவகாரத்தில் பல பாஜகவினர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சுப்பிரமணியசாமி இவ்வாறு டிவிட் பதிவிட்டுள்ளார்.