டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர்,துணைகுடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பவர் மரியாதை செலுத்தினர்.
இந்திய திருநாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் அடல்பிகாரி வாஜ்பாய். நாட்டின் பிரதமராக பதவியேற்ற முதல் பாஜக தலைவர் என்ற பெருமைக்குரியரான வாஜ்பாய், . 1998 முதல், 1999 வரை, 13 மாதங்கள், பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில், பிரதமராக பதவி வகித்த இவர் 1999- 2004 வரை, மீண்டும் பாஜக ஆட்சியில் பிரதமராக இருந்தார்.
வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது 93 ஆவது வயதில் காலமானார். டெல்லியில், அடல் சமாதி ஸ்தல் என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நினைவிடம் திறக்கப்பட்டது.
இன்று வாஜ்பாயின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று பாஜகவினரால் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘அடல் சமாதி ஸ்தலில்’ குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைகுடியரசுத் தலைவர் வெங்கைநாயுடு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உப்ட ஏராளானோர் மரியாதை செலுத்தினர்.