டில்லி
பி.எம்.நரேந்திரமோடி என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், படத்தின் போஸ்டர் வெளியிட்ட 2 செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிரதமர் மோடி பெயரில், பி.எம். நரேந்திர மோடி என்னும் பெயரில் மோடியின் வாழ்க்கை கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் நடித்துள்ளார். ஒமங் குமார் இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 12தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், நரேந்திர மோடி பயோபிக் படத்தை வெளியிட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுபோல, இந்த தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடி வரலாறு படம் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படத்தின் போஸ்டர் வெளியிட்ட 2 செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.