கமதாபாத்

பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென் அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸ் ஆவார்.  பிரதமர் மோடியின் தந்தையின் தம்பியான ஜகஜீவன்தாஸ் பல வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார். அவர் மனைவி நர்மதாபென் அகமதாபாத் நகரில் உள்ள புது ரானிப் பகுதியில் தனது மக்களுடன் வசித்து வருகிறார்.

நர்மதாபென்னுக்கு தற்போது 80 வயதாகிறது.  இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அகமதாபாத் நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இன்று அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடியின் தம்பியான பிரகலாத் மோடி, “எங்கள் சித்தி நர்மதாபென் 10 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவர் அங்கு உடல் நிலை மோசமாகி இன்று உயிர் இழந்துள்ளார்” என அறிவித்துள்ளார்.