சென்னை: பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் நடிகர் விஜய் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரையுலகினர், விளையாட்டுத்துறையினர், உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தியில் , “பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என அந்த வாழ்த்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி, நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளில் அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்தபாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.
“இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்கு உள்ளது.. மோடி சொன்னதை கவனிச்சீங்களா?” சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டு தோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள். இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது வாழ்த்துச் செய்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்; இந்தியத் திருநாட்டை வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளோடு இருக்க பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.