சென்னை: ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 2017ம் ஆண்டில் அதிமுக ஆட்சி இப்போது கவிழ்ந்துவிடும் என்று கூறினர். ஆனால் நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்துள்ளனா். குடியுரிமை சட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. அனைத்து மாநிலங்களையும், மத்திய பாஜக அரசு சமமாக நடத்துகிறது.
இந்தத் தோ்தலில் எங்களது கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பாஜகவின் மூத்த தலைவா்கள் தொடங்கி, பிரதமா் மோடி வரை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனா். பிரதமா் இரண்டு, மூன்று சுற்று பயணங்கள் மேற்கொள்வார்.
ஏப்ரல் 2ம் தேதி மதுரையில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர் என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]