‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். இங்கே அவர் இராணுவ வீரர்களைச் சந்தித்தார்.

பிரதமர் மோடி இன்று காலை ஆதம்பூர் விமானப்படை தளத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. விமானப்படையின் துணிச்சலான வீரர்களுடனும் அவர் கலந்துரையாடினார். இதன் போது, விமானப்படை வீரர்கள் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை வழங்கினர்.
முன்னதாக, சிர்சா மற்றும் ஆதம்பூர் விமானப்படை தளங்களை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியது, இதனை இந்தியா மறுத்தது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் சென்றதை அடுத்து அந்த விமானப்படை தளத்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மையில்லை என்பது அம்பலமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.