நியூயார்க்:
ஜி-20 மாநாட்டில் தொடக்க நாளான இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு ஜப்பானில் இன்று தொடங்கியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசினர்.
அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறியதாக குற்றஞ்சாட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.
மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தாலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகின்றன.
இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடியிடம் ட்ரம்ப் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனையடுத்து, நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், நாம் இருவரும் சேர்ந்து பெரிய வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.
வர்த்தகம். 5ஜி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்துப் பேசுவோம். நாம் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம்.
ஆனால் நம்முடைய நாடுகள் நெருக்கமாக வரவில்லை. நாடுகளும் நெருக்கமாகும் என்று உறுதியளிக்கின்றேன்.
ராணுவம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் இணைந்து செயலாற்றுவோம். கமான நேரம் இருக்கிறது. அவசரம் வேண்டாம். அதற்கான அழுத்தத்தை காலம் தரவில்லை என்றார்.
புதினுடன் சந்திப்பு
ரஷ்ய அதிபர் புதினையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார்.
இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று தெரிவித்த ட்ரம்ப், நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட வேண்டாம் என புதினிடம் கிண்டலாக தெரிவித்தார்.