டெல்லி: அமெரிக்காவில் நடைபெற உள்ள ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநாட்டில் எ சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவாட் அமைப்பில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 2024ம் ஆண்டுக்கான ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைறுகிறது.
இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ப பிரதைமர் மோடி இன்ற அமெரிக்கா செல்கிறார். அங்கு நடைபெறும் மாநாட்டில் சர்வ பிரச்சினைகளான, ரஷ்யா–உக்ரைன் மோதல், மேற்கு ஆசியா பதற்றம் மற்றும் இந்தோ- பசிபிக் பிராந்திய நிலவரம், இஸ்ரேல் காசா போர் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நாட்டு தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்புகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர். பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பையும் சந்திக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் செப். 22-ம் தேதி அவர் சிறப்புரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து வரும் 23ந்தேதி நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நடைபெறும் எதிர்காலத்துக்கான உச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார்.