டெல்லி
நாளை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா விமான தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள் வதோதரா நகரில் டாடா நிறுவனத்தின் விமான தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை இந்திய ராணுவத்துக்கு சி-295 ரக விமானங்களை தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
நாளை இந்த தொழிற்சாலையை ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செசுடன் இணைந்து பிரதமர் மோடி றந்து வைக்கிறார். இது இந்திய ராணுவ விமானங்களுக்கான முதல் தனியார் தொழிற்சாலை ஆகும்.
டாடா நிறுவனம் இந்த தொழிற்சாலையில் ராணுவத்துக்காக 40 விமானங்களை தயாரித்து வழங்க பொறுப்பேற்றுள்ளது. இன்று ஸ்பெயின் பிரதமர் 2 நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
Patrikai.com official YouTube Channel