டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இன்று 12வது நாளாக தொடரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நோட்டோ விவகாரத்தில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி போா் தொடுத்தது. இன்று 12வது நாளாக தொடர் கிறது. உக்ரைன் தலைநகா் கீவை சுற்றிவளைத்து ரஷிய படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். மேலும் இரண்டு முக்கிய தலைநகரங்களை ரஷயா கைப்பற்றி உள்ளது. உக்ரைனில் வான்வெளி தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள், தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறத.
ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்கும் வகையில், உக்ரைன் துருப்புகளும் கடுமையாக போராடி வருகின்றன. இதனால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நகரங்களில் ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் சுமி உள்பட பல பகுதிகளில் இருந்து உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 15 லட்சம் அகதிகள் உக்ரைன் எல்லைகளைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஏற்கனவே பிரதமர் மோடி பிப்ரவரி 26ந்தேதி உக்ரைன் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இன்று 2வது தடவையாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது சுமி உள்பட பல பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாகவும், உக்ரைன் ரஷ்யா இடையிலேயான போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும்படியும் வலியுறத்துவார் என தெரிகிறிது.
உக்ரைனில் 12ஆவது நாளாக ரஷியப் படைகள் தனது தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில் பிரதமர் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.