டில்லி
நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இத்தொடர் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.
நாளை டில்லியில் பிரதமர் ர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் 5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடந்த இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.