தராபாத்

தராபாத் நகரில் வரும் 5 ஆம் தேதி பிரதமர் மோடி ராமானுஜருக்கு 216 அடி உயர்த்தில் சமத்துவ சிலை திறக்க உள்ளார்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வைணவ பீடாதிபதியான ராமானுஜர் அந்த காலத்திலேயே பல சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தார்.   தமக்கு உபதேசிக்கப்பட்ட 8 எழுத்து மந்திரத்தை கோவில் கோபுரம் மீது ஏறி உலக மக்கள் அனைவருக்கு உபதேசம் செய்துள்ளார்.  அழகு தமிழ் பாசுரங்களை இயற்றிய நம்மாழ்வார் பெயரை நிலை நாட்டி உள்ளார்.

அப்போது அதிகமாக கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையை ஒழிக்க முதலில் பணிகளை தொடங்கியவர் ராமானுஜர் ஆவார்.   அனைத்து வைணவக்கோவில்களிலும் ஒரே மாதிரியான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் என ஒழுங்கு படுத்தியவர் ஆவார்.  இவரது தீண்டாமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி இவரது கதையைத் தொலைக்காட்சி தொடராக வடிவமைத்தார்.

ராமானுஜருக்கு ஹைதராபாத்தில் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் மடத்தில் 34 ஏக்கர் பரப்பளவில், 216 அடி உயரத்தில் பஞ்சலோக சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. ல் ராமானுஜர் சிலையில் 120 கிலோ எடையில் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தாமரை மலர் பீடம் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும்படி பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை உலகின் 2வது மிகப்பெரிய சிலையாகும்.   இந்த ராமானுஜர் சிலை குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அடுத்தபடியாக  உயர்ந்த சிலையாகக் கருதப்படுகிறது.  வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் இந்த சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.   இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.