னாமா, பெஹ்ரைன்

பெஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள 200 வருடம் பழமையான கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்க உள்ளார்

பெஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா வில் கிருஷ்ணர் கோவில் ஒன்று சுமார் 200 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலைத் தட்டை இந்து வர்த்தக சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இந்த கோவிலில் 45000 சதுர அடி நிலத்தில் மூன்றடுக்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலில் 80% அதிக பக்தர்கள் தரிசிக்க முடியும்.

அத்துடன் இந்த கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகள் மூலமாக அர்ச்சகர்களுக்குத் தங்குமிடம், திருமண அரங்கம், உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. அத்துடன் பெஹ்ரைன் சுற்றுலாத்துறையின் உதவியுடன் இந்த மண்டபம் இந்து திருமணங்களுக்கான வளாகத்தை அரசர் அமைக்க உள்ளார்.

நாளை பிரதமர் மோடி 2 நாள் அலுவலக பயணமாக பெஹ்ரைன் செல்ல உள்ளார். இந்தியப் பிரதமர் அலுவலக பயணமாக பெஹ்ரைன் வருவது இதுவே முதல் முறையாகும். அவர் தனது பயணத்தின் இடையே கிருஷ்ணர் கோவில் புனரமைப்பு பணியைத் தொடங்கி வைக்க உள்ளார். கோவிலின் 200 ஆம் ஆண்டு விழா நேரத்தில் பிரதமர் கோவில் பணிகளைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.