டெல்லி:
ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யும் வகையிலான, ஐசிஎம்ஆர் கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் கொரோனா பரவல், உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 3வது இடத்தில் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், கொரோனாவுக்கான உயர்பரிசோதனை வசதிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான (ஐசிஎம்ஆர்) சார்பில் இந்த சோதனை மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த வசதிகள் நாட்டின் பரிசோதனைத் திறனை அதிகரிப்பதுடன், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற உதவும் என்பதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான சேதனை மையங்கள் முதல்கட்டமாக, நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உயர்மட்ட பரிசோதனை வசதிகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் மாதிரிகளைச் சோதிக்க முடியும்.
இதுமட்டுமின்றி, ஹெபடிடிஸ் பி, சி சோதனைகள் (மஞ்சள் காமாலை), எச்ஐவி, காசநோய், டெங்கு உள்பட நோய்களுக்கான சோதனைகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.