டெல்லி:

அஜ்மெர் தர்கா திருவிழாவுக்கு பிரதமர் மோடி சால்வை வழங்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மெரில் க்வானா மொய்னுதீன் கிஸ்தி சமாதி உள்ளது. இங்கு வரும் 30ம் தேதி பிரசித்த பெற்ற யுர்ஸ் திருவிழா தொடங்குகிறது.
இதற்கு மத்திய அரசு சார்பில் சிறப்பு சால்வயை மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்த சால்வை அந்த தர்காவில் உள்ள 6ம் நூற்றாண்டின் மத குருமார் க்வாஜா கிஸ்தி சமாதியில் போர்த்தப்படுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர் காரிப் நவாஸ் (ஏழைகளின் புரலவர்) என்று அழைக்கப்பட்டார்.

மேலும், மோடி தனது வாழ்த்து செய்தியில், ‘‘யுர்ஸ் விழாவை சிறப்பாக நடத்த எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பாரம்பரியத்தின் சிறந்த ஆன்மீகவாதியாக திகழ்ந்தவர் க்வாஜா மொய்னுதீன்.

அவரது மனிதாபிமான செயல்பாடு நமது எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக திகழும். உலகம் முழுவதும் உள்ள அவரது அபிமானிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.