டெல்லி

நாடாளுமன்றத்தில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேறற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக வேண்டும் என பிரதார் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.

மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 9 ஆம் தேதி பிரதமாராக பதவியேற்றார். 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநிலங்களவையின் 264வது அமர்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.

பிரதம்ர் மோடி செய்தியாளர்களிடம்,

“இந்த வராலாற்று சிறப்புமிக்க நாளில் புதிய எம்.பி.க்கள் அனைவரையும் வரவேற்கிறேன். முதன்முறையாக புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எம்.பி.க்கள் பதவியேற்பு நடக்கிறது. நாடாளுமன்ற கூட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் என நம்புகிறேன்.

புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளை தொடங்க வேண்டிய நேரம் இது. எங்களது நோக்கம், செயல்பாடு,ஆகியவற்றுக்காக 3வது முறையாக மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடர் ஜனநாயகத்தின் புதிய தொடக்கம்.

நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம். நாட்டுக்கு சேவை செய்யவும், 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்.பி.க்கள் பாடுபடவேண்டும். மக்கள்நல திட்டங்கள் நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”

எனத் தெரிவித்துள்ளார்.