டில்லி

லிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப் பிரதமர் உத்தரவு இட்டுள்ளார்.

சென்ற வருடம் ஜப்பான் நாட்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.   இந்த வருடம் அதே போட்டிகள் நடைபெற உள்ளன.   இதையொட்டி பல நாடுகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 49 நாட்கள் உள்ளன.  இந்தியாவின் தயார் நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.  இதில் கலந்து கொள்ள இதுவரை சுமார் 100 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் மேலும் 25 வீரர்கள் தகுதி பெற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் தாம் காணொலி மூலம் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகளிடம் பிரதமர் தெரிவித்துள்ளார்.  அத்துடன் ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள், வீராங்கனைகள், உதவியாளர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.