அபுதாபி:

அபுதாபியில் முதல் இந்து கோயில் கட்ட பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

ஜோர்டான், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.

அபுதாபியில் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைதொடர்ந்து அபுதாபியில் இந்து கோயிலுக்கு கட்ட அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து துபாய் சென்ற மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே பேசினார்.