இந்தூர்: கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக டாப் ஸ்டார் அந்தஸ்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் வழங்கிய நிலையில், சாதாரண வீரரான சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம் வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பிரபலங்கள் பலரும் நிதியுதவியை அளித்து வருகின்றனர். இதில் விளையாட்டுப் பிரபலங்களும் அடக்கம்.
கிரிக்கெட் வீரரும், உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா, ரூ.52 லட்சம் நிதியளித்தார். இதில், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சத்தையும், உத்திரப் பிரதேச முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சத்தையும் பிரித்து வழங்கியுள்ளார்.
“கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டிய நேரம் இது. எனவே, அதற்கான நிவாரண நிதியாக இதை வழங்குகிறேன்” என்றுள்ளார்.
ரூ.52 லட்சம் கொரோனா வைரஸ் நிதி வழங்கியுள்ளதற்காக, சுரேஷ் ரெய்னாவை, பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.