ஜெய்ப்பூர்
நாளை பிரதமர் மோடி ராஜஸ்தானில் அமைய உள்ள 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
மத்திய அரசு ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து சிபெட் பெட்ரோ ரசாயனங்கள் தொழில் நுட்ப நிறுவனத்தை உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம் ஒரு சுயநிலை நிறுவனமாகும் இந்நிறுவனம் பெட்ரோ ரசாயனம், மற்றும் அது தொடர்பான துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் பல தொழில்நுட்ப நிபுணர்கள் உருவாக உள்ளனர்.
ஜெய்ப்பூரில் நாளை இந்நிறுவனத்தை காணொலி காட்சி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தவிர ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா, சிரோகி, அனுமன்கர், மற்றும் தௌசா ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ள 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்துக் கொள்கின்றனர்.
இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு ‘மாவட்டம்/பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் இணைந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவக்கம்’ என்னும் மத்டிய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்படி தகுதி குறைந்த மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 157 புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.