டில்லி
பிரதமர் மோடி இன்று முதல் 5 நாள் பயணமாக ஜப்பான், பப்புவா நியுகினியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்கிறார்
ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். உலகில் இருக்கும் சக்திவாய்ந்த குழுக்களில் இந்த குழுவும் ஒன்றாகும். இந்த வருட உச்சி மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமாவில் நடக்கிறது.
இந்த ஜி7 குழுவில் உள்ள நாடுகள் இன்று உணவு நெருக்கடி, ஆற்றல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவை குறித்து ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆசியாவில் சீனாவின் மாபெரும் வளர்ச்சி குறித்தும், சந்தை உலகைச் சீனா கட்டுப்படுத்துவது குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவிரவாதம், ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் இன்று முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட உள்ளன.
பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார். ஜப்பானில் ‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார். அவர் அங்கிருந்து ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளார், இது 5 நாள் பயணமாகும்.