டில்லி

லங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

நேற்று இலங்கை நகர் அதிபர் தேர்தல் நடந்தது.  நேற்று நடந்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிபர் தேர்தலில் மொத்தம் 35 பேர் போட்டியிட்டனர்.   இலங்கையில் அதிபர் தேர்தலில் இத்தனை பேர் போட்டியிட்டது இதுவே முதல் முறை ஆகும்.   அதே வேளையில் தற்போதைய அதிபர், பிரதமர் உள்ளிட்ட யாரும் போட்டியிடவில்லை.

அந்நாட்டின் முன்னாள் அதிபரான ராஜபக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சே 69.25 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இவரை எதிர்த்து நின்ற இலங்கை ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச 55.64 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி அடுத்த அதிபராகப் பதவி ஏற்க உள்ள கோத்தபாய ராஜபக்சேவுக்கு தொலைப்பேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  அப்போது மோடி இந்தியாவுக்கு வருமாறு கோத்தபாய ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  மோடியின் அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.