டெல்லி: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் வெற்றி பெற வாழ்த்து கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உலக டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டதுடன், அவர்கள் மென்மேலம் பெற வாழ்த்தினார்.

இதையடுத்து, இன்று பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து செலவிருக்கும் வீரர் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி,  அவர்கள் வெற்றி  தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு போட்டிகளில் இந்தியா சார்பில் 120 பேர் கொண்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.   இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று சந்தித்து கலந்துரையாடினர். அப்போது பிரதமர், அவர்களை ஊக்கப்படுத்தி, போட்டிகளில் சிறப்பாக செயல்பட தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா, பேட்மிண்டனில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, குத்துச்சண்டை உலக சாம்பியன் நிகாத் ஜரீன் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளை பிரதமருடன் ஆர்வமாக கலந்துரையாடினர்.

https://x.com/narendramodi

அப்போது, வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி,  நீங்கள் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் உள்ளீர்கள். வெற்றி பெற்று திரும்பும் போது உங்களை வரவேற்கும் மனநிலையில் நானும் இருக்கிறேன். விளையாட்டு உலகின் நட்சத்திரங்களான உங்களை சந்திக்கவும், உங்களிடம் இருந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், உங்களின் கடின உழைப்பை புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறேன். அதேபோல, நான் எல்லோருடனும் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முயற்சிக்கிறேன்

நாம் பாரிசுக்கு விளையாட செல்கிறோம்; நமது சிறந்த திறமையை வெளிப்படுத்தப்போகிறோம். ஒலிம்பிக் கற்றலுக்கான மிகப்பெரிய களம். கற்கும் மனப்பான்மையுடன் பணியாற்றுபவர்களுக்கு கற்க வாய்ப்புகள் அதிகம். குறை சொல்லி வாழ நினைப்பவர்களுக்கு வாய்ப்புகளே கிடைக்காது. நம்மை போன்ற பல நாடுகளை சேர்ந்தவர்களும் ஒலிம்பிக் வருகிறார்கள். பல சிரமங்களையும், அசவுகரியங்களையும் எதிர்கொள்கிறீர்கள். ஆனால் உங்களின் இதயத்தில் நாடும், நமது தேசியக் கொடியும் உள்ளது. இந்த முறையும் நீங்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒலிம்பிக்கிற்காக பாரீஸ் செல்லும் நம் வீரர்களுடன் கலந்துரையாடினேன். நமது விளையாட்டு வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் வாழ்க்கைப் பயணங்களும், வெற்றிகளும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றிருந்தது. இந்நிலையில் வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கூடுதல் பதக்கங்களை வெல்ல இந்திய விளையாட்டுத் துறை, வீரர்களை தயார்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.