அய்சால்,

மிசோரம் மாநிலத்தில்  துய்ரியல் நீர் மின் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.  1302 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மோடி, பாஜ ஆட்சியின் மிகப்பெரிய திட்டமான இந்த துய்ரியல் நீர் மின் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பெருமிதம் கொண்டார்.

மேலும், வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றங்களுக்காக தான் ஓயாமல் உழைத்து வருவதாகவும்,  மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்தியஅரசு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

1998ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட  இந்த துய்ரியல் நீர் மின் திட்டம், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக முடக்கி வைக்கப்பட்டது. பின்னர் 2011ம் ஆண்டு மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கி  தற்போது நிறைவுபெற்றுள்ளன.

இந்த நீர் மின் திட்டம்  மூலம் தினசரி 60 மெகாவட் மின் உற்பத்தி செய்ய முடியும்.