டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த நிலையில், இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் பலமுறை இந்தியா வருகை தந்திருந்தாலும், இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பின் ரணில்முதன்முறையாக இந்தியா வந்துள்ளார்.
இன்று காலை இந்தியா டெல்லி வந்த விக்கிரமசிங்கேவை, டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் வரவேற்றார். பின்னர் கற்பா நடனத்துடன் இலங்கை அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதித் தோவல் ஆகியோரை சந்தித்து உரையாடினார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி, கச்சத்தீவை மீட்பது மற்றும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசப்படுமா என்ற கேளவி எழுந்துள்ளது
இலங்கை இந்தியா ஆகிய 2 நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வரும் நிலையில், இலங்கை அதிபரின் இந்த வருகையால் அந்த உறவு மேலும் வலுவடையும் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலுமை, இந்த சந்திப்பின்போது, இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும், வர்த்தகம்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இலங்கை அதிபர் ரணில், இந்தியா வந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.