டெல்லி: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, செங்கோட்டையில் 12வது முறையான இன்று காலை கொடியேற்றினார். அப்போது அவர் மூவர்ண நிற ஸ்டோலுடன் கூடிய காவி நிற தலைப்பாகையை அணிந்திருந்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அரசியலமைப்பு சட்டம் தான் தேசத்திற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது என்று கூறினார்.

நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றினார். அப்போது, ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உள்பட செங்கோட்டையில் குழுமியிருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகள், பொதுமக்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின்போது, ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 140 கோடி மக்களின் மனசாட்சியாக இந்திய ராணுவம் செயல்படுகிறது. தாய் மண்ணின் பெருமையை காக்க இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். 140 கோடி மக்களும் கொண்டாடும் நாளாக இந்த நன்னாள் அமைந்துள்ளது. லட்சக்கணக்கான வீரர்களின் தியாகத்தால் நம் தேசம் விடுதலை பெற்றது. இந்திய விடுதலை போராட்டத்தின் பெண்களின் பங்கு இன்றியமையாதது.

இந்திய மக்கள் அனைவரும் பெருமையுடன் கொண்டாடும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. தாய் மண்ணின் பெருமையை காக்க இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு வணக்கத்தை செலுத்துகிறேன். அரசியல் சாசனமே இந்திய நாட்டின் ஒளிவிளக்கு. அரசியலமைப்பு சட்டம் தான் தேசத்திற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.