குருவாயூர்:

புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்ய பிரதமர் மோடி இன்று கேரளா வருகை தந்துள்ளார். கோவிலுக்கு சென்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கேரள பாரம்பரிய உடையான வேட்டி துண்டு  அணிந்து  கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.

17வது மக்களவைக்கான தேர்தலில் வெற்றி பெற்று, 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி, இன்று குருவாயூர் கோவிலில் வழிபாடு செய்வதற்காக கேரளா வருகை தந்தார்.

தனி விமானத்தில் கொச்சி வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம்  திருச்சூரில் உள்ள குருவாயூர் அப்பன் கோவிலுக்கு சென்றார். அவரை மாநில பாஜக தலைவர்கள் உள்பட கோவில் நிர்வாகம் சார்பிலும் சிறப்பு வரவேற்பு அளிக்கப் பட்டது.

கோவிலுக்கு கேரள பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடிக்கு, கோவில் அர்ச்சகர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலுக்குள் வந்து சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து, அங்கு  மாநில பாஜகவினர் இடையே கலந்துரையாடுகிறார். பின்னர், அங்கிருந்து நேராக   மாலத்தீவு செல்கிறார்.

இரண்டாவது முறையாக, பிரதமராக பதவியேற்றபின், முதல் வெளிநாட்டு பயணமாக, மாலத்தீவு நாட்டுக்கு, இன்று செல்கிறார். மாலத்தீவுக்கு, செல்லும் பிரதமர் மோடி, அங்கு, இரு தரப்பு உறவு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மாலத்தீவு அதிபர், இப்ராகிம் சாலிகுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து மாலத்தீவில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.