திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இன்று காலை தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்பட 4 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி இன்று மாலை தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், இன்று காலை கேரளத்துக்குப் பயணம் மேற்கொண்டு 4 புதிய ரயில்களையும், பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். ண்மையில் திருவனந்தபுரம் மாநகராட்சித் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்தச் சூழ்நிலையில் பிரதமரின் கேரள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவனந்தபுரத்தில் அம்ரித் பாரத் ரயில் சேவையையும், குருவாயூர் – திருச்சூர் இடையே பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் .
அதன்படி, தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்ளிட்ட 3 அம்ரித் பாரத் ரயில்கள், திருவனந்தபுரம் – செர்லபள்ளி (தமிழ்நாடு வழியாக) செல்லும் அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தெருவோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டமான பிரதமரின் ஸ்வநிதி கடன் அட்டைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது வட்டியில்லாத எண்மக் கடன் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி, சுமாா் ஒரு லட்சம் பேருக்கு இந்தத் திட்டத்தில் ஒரே நாளில் கடன் வழங்கப்படவுள்ளது. தொடா்ந்து திருவனந்தபுரம் நவீன அஞ்சலகத்தைத் திறந்து வைத்தார்.
மேலும், புத்தாக்கம்-தொழில்நுட்பம்-தொழில்முனைவு மேம்பாட்டு மையத்துக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். அதையடுத்து, முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ‘ரேடியோசா்ஜரி’ மையத்துக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். . இதன்மூலம் தென் மாநிலங்களில் சுற்றுலா, வா்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு மேலும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள பயணத்தைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் பிரதமா் மோடி தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்கிறாா்.
[youtube-feed feed=1]