டெல்லி: நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படு தீவிரமாக உள்ளது. டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் என பல மாநிலங்களில் நாள்தோறும் தொற்றுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
கொரோனா பரவல் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு என நிலைமை படு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.
Patrikai.com official YouTube Channel