சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதரை சந்தித்து பேசிய நிலையில், தெய்வீக புலவரான தமிழ்ப்புலவர் திருவள்ளுவரை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என அறிவித்து உள்ளார்.
இரண்டு நாள்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்குடனை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, 4 முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படிடி,மின்னிலக்கத் தொழில்நுட்பம் (digital technology), சுகாதாரமும் மருத்துவமும், கல்வி ஒத்துழைப்பும் திறன் மேம்பாடும், பகுதி மின்கடத்திக் கட்டமைப்பில் (Semi conductor production) பங்காளித்துவம் ஆகியவை கறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரின் முன்னிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் வோங்குடன் பிரதமர் மோடி மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார். முன்னதாக, பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று விருந்தளித்தார்.
இதைத்தொடர்ந்து, சிங்கப்பூரில் சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். ஏற்கனவே பாஜகவின் தேர்தல் அறிக்கையில், உலகம் முழுவதும் தமிழ் மொழியின் நாகரிகம், பண்பாட்டை வளர்க்கவும், பேணிக் காக்கவும் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது, முதன்முதலாக சிங்கப்பூரில் சர்வதேச திருவள்ளுவர் கலாசார மையத்தை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு: பல ஒப்பந்தங்கள் கையெழுத்து…