டெல்லி: வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டி இருக்கிறது. பலி எண்ணிக்கை 4,531 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 194 பேர் பலியாகி இருக்கின்றனர்.
வரும் 31ம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிகிறது. இந் நிலையில், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசி உள்ளார். அப்போது ஊரடங்கை தளர்த்தலாமா? நீட்டிக்கலாமா? என்பது குறித்த முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் எட்டி வரும் நிலையில், மோடி -அமித்ஷா சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 5வது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel