டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியானது அரசாங்கத்தின் மத்திய தணிக்கை துறையான சிஏஜியால் சரிபார்க்கப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மார்ச் 28 அன்று அமைச்சரவையால் அமைக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் அறக்கட்டளை, பிரதமர் நரேந்திர மோடியை அதன் தலைவராகவும், மூத்த அமைச்சரவை உறுப்பினர்களை அறங்காவலர்களாகவும் கொண்டுள்ளது.
இந்த நிதி தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் நன்கொடைகளை அடிப்படையாக கொண்டிருப்பதால், தொண்டு நிறுவனத்தை தணிக்கை செய்ய எங்களுக்கு உரிமை இல்லை என்று சிஏஜி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அறங்காவலர்கள் எங்களை தணிக்கை செய்யச் சொன்னால், நாங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்ய மாட்டோம் என்று சிஏஜி மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து, இந்த நிதிக்கு பங்களிக்குமாறு பிரதமர் கோரி இருந்தார். சமீபத்தில், அமைச்சரவை செயலாளர், அதன் அனைத்து அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிறரை பிம் கேர்ஸ் நிதிக்கு பங்களிக்குமாறு செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.
பல முதலமைச்சர்கள் தங்கள் மாநில நிவாரண நிதிகளை விட PM CARES நிதிக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளனர்.