சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காலைவ 10மணிக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய தேவையில்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தேர்வுக்காக 3,081 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 3,91,343 மாணவர்கள், 4,31,341 மாணவிகள் என மொத்தம் 8,22,684 பேர் தேர்வை எழுதுகின்றனர். இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது.
மாணாக்கர்கள் தேர்வு காரணமாக மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி வழங்கப்படும்.பிற்பகல் 1.10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும் போது விடைத்தாள்களை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 28ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் தேர்வு எழுதும் மாணாக்கர்கள் முக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 3மணி நேரம் முக்கவசம் அணிந்துகொண்டு தேர்வு எழுதுவது கடிதம் என பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய தேவையில்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வறைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று பரவிய தகவல் தவறானது. ஏனெனில், கொரோனா தொற்று தமிழகத்தில் குறைவாக உள்ளது. எனினும், சமூக இடைவெளி பின்பற்றிதான் தேர்வுகள் நடைபெறவுள்ளது .அதே சமயம், கிருமிநாசினி கொண்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.