சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச்  தசெயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் உள்பட உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகம் வரும் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ( இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை) மேலும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு. அன்று இறைச்சி கடை முதல் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் செய்முறைத் தேர்வு ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.