சென்னை:
தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடுவதில்சிக்கல் உள்ளதாகவும், பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் பிளஸ்2 தேர்வு தொடங்கி கடைசி நாளான மார்ச் 24ந்தேதியுடன் முவடைந்தது. இதையடுத்து, கொரோனா தொற்று ஊரடங்குக்கு இடையிலும் 12-ஆம் வகுப்பு தேர்வு தாள்களை திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, ஜூலை மாதம் முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
12-ம் வகுப்பு தேர்வு முடிவை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசனை நடத்திய பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமாகி வருவதால், பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.