சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருப்பதாக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 1ந்தேதி பிளஸ்2 தேர்வுகள் தொடங்கின. சுமார் 1 மாதம் காலமாக நடைபெற்ற இந்த தேர்வை  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

அதைத்தொடர்ந்து வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மதிப்பெண்கள்  கணினியில் ஏற்றப்பட்டப்பட்டு, மாணவ மாணிவிகளுக்கான சர்டிபிகேட் தயாராகும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், நாளை காலை தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும், தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் அவர்களின் பள்ளிகளில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும், அல்லது  இணையதளம் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள இணையதள முகவரி:

www.dge.tn.nic.in,

www.dge.tn.gov.in

ஆகிய இணைத்தளங்களில் தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அல்லது மேற்கண்ட இணையதளங்களுக்கே சென்று தேர்வு முடிவினை அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.