சென்னை: தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது இந்த ஆண்டு 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் முதலிடத்தை கைப்பற்றி உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று 11ம் வகுப்பு (பிளஸ்1) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளை  tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த ஆண்டு 90.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாநிலம் முழுவதும் மொத்தம்  8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அவர்களில்  7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்களை விட மாணவிகள் 7.43% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8,11,172 பேர் எழுதிய நிலையில், தேர்வில் 7,39,539 (91.17% ) பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 4.04 லட்சம் மாணவிகள் மற்றும் 3.35 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் 7.43 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 90.90% சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 187 சிறைவாசிகளில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.27%  மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 8,221 மாற்றுத் திறனாளி மாணாவர்களில் 7,504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3432 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

241 அரசுப்பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி  பெற்றுள்ளனர். இது 85.75 சதவிகிதமாகும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.36 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.09 சதவிகி தேர்ச்சியும், இருபாலர் பள்ளிகளில் 91.61 சதவிகித தேர்ச்சியும், பெண்கள் பள்ளிகளில் 94.46 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளன.

பாடப்பிரிவு வாரியாக பெற்ற தேர்ச்சி விகிதம்:

அறிவியல் 94.31 சதவீதம், வணிகவியல் 86.93 சதவீதம், கலைப்பிரிவு 72.89 சதவீதம், தொழிற்பாடம் 78.72 சதவீதமாகும். பாட வாரியாக 100க்கு 100 பெற்றவர்கள்: தமிழ் 8, ஆங்கிலம் 13, இயற்பியல் 696, வேதியியல் 493, உயிரியல் 171. கணிதம் 779, தாவரவியல் 2, விலங்கியல் 29, கணினி அறிவியல் 3432, வணிகவியல் 62. கணக்கு பதிவியல் 415, பொருளியல் 741, கணினி பயன்பாடுகள் 288, வணிக கணிதம், புள்ளியியல் 293.

மாவட்ட வாரியாகத் தேர்ச்சி விகிதம்
இந்த நிலையில், 96.02 சதவீதத் தேர்ச்சியோடு கோவை மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.  அடுத்து, 95.56% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடம் பெற்றுள்ளது. 95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3-வது இடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் 81.40 ஆகும்.