கொல்கத்தா

ரிசா மாநிலம் கேந்திரபாராவில் இருந்து ஏராளமான பிளம்பர்கள் மேற்கு வங்கத்தில் பணி புரிகின்றனர்.

கடந்த 1947 ஆம் வருடம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில், “கொல்கத்தா நகராட்சியின் பைப் லைனை குற்றம் சாட்டப்பட்டவர் ஒரிசாவில் இருந்து வந்த பிளம்பர் மூலம் சரி செய்துள்ளார்.   அந்த பிளம்பர் நகராட்சியின் உரிமம் பெறாதவர்.   ஆகவே குற்றம் சாட்டப்பட்டவர் நகராட்சி விதியை மீறி உள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது நீண்ட நெடுங்காலமாக கொல்கத்தாவில் ஒரிசாவில் இருந்து வந்தவர்கள் பணி புரிந்தது இதன் மூலம் தெரிய வருகிறது.  இந்நிலை இன்றும் நீடிக்கிறது.  சுதந்திரம் அடைந்த போது பிளம்பிங், மின்சார ஒயரிங் ஆகியவைகளை செய்து வந்த வங்காளிகள் அங்கிருந்து அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.  அந்த இடத்தை நிரப்ப ஒரியாவில் இருந்து வந்தவர்கள் பணி புரிய தொடங்கினர்.

தற்போதும் இதே நிலை நீடித்து வருகிறது.   ஒரிசாவில் குறிப்பாக கேந்திரபாராவில் இருந்து ஏராளமான பிளம்பர்கள் மேற்கு வங்கத்தில் பணிபுரிகின்றனர்.   இந்த பகுதியில் வசித்து வந்த மக்களில் 47% பேர் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.   இவர்கள் அனைவரும் பிளம்பர்கள் அல்ல. இவர்களில் கட்டிட வேலை செய்பவர்களும் உள்ளனர்

கேந்திரபாராவில் உள்ள மாநில பிளம்பிங் தொழில்நுட்ப பயிலகத்தில் பயின்றவர்கள் அனைவருமே தற்போது கொல்கத்தாவில்  பணி புரிந்து வருகின்றனர்.  இந்தியாவில் பிளம்பிங் பணி புரிபவர்களில் 90% பேர் சரிவர பணியை பயிலாதவர்கள் என்னும் நிலையில் அந்த பணியில் சான்றிதழ் பெற்ற ஒரிசா வாசிகளுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தற்போது பயிற்சி பெற்ற பிளம்பர்களுக்கு கொல்கத்தாவில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.   சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் பட்டதாரி இளைஞர்கள் சராசரியாக மாதம் ரூ.10000 ஊதியம் பெறும் நிலையில் இந்த சான்றிதழ் பெற்ற பிளம்பர்கள் சராசரியாக ரூ.20000 மாத ஊதியம் பெறுகின்றனர்.