புது டெல்லி:
ப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டதற்காக, 50 நாள் கடந்த பின்னரும் 916 வெளி நாட்டினர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்களை தனிமைபடுத்தல் மையங்களில் இருந்து விடுவித்து, டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்குமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதற்கு பின்னரும் இவர்கள் மார்ச் 30-ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை அங்கிருந்து விடுவித்து டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் ஆஷிமா மண்ட்லா மனு தாக்கல் செய்துள்ளர். அந்த மனுவில், புனித ரமலான் மாதம் முடிவடையப் போகிறது, மேலும் ஈத் பண்டிகை இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் வருகிறது. இதனால்வழக்கை விரைவாக விசாரணை நடத்த வேண்டும். மனுதாரர்கள் உட்பட 916 வெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்பட்டால், அது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, நீதிபதி நவின் சாவ்லா முன் பட்டியலிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் டெல்லியின் நிஜாமுதீன் மாநாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம், கடந்த ஏப்ரல் மாதம், 960 வெளிநாட்டினரை தடுப்புப்பட்டியலில் பதிவு செய்தது. மேலும், அவர்கள் விசா நிபந்தனைகளை மீறி தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றதற்காக அவர்களது சுற்றுலா விசாக்களை ரத்து செய்தது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு வலதுசாரி ஊடகங்கள் மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியவர்க்ளே காரணம் என்று தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.