சென்னை: 

கொரோனா வைரஸ் பாதிப்பு வாய்ப்புள்ளதால், ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ-க்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் வரும் 29-ஆம் தேதி தொடங்கி மே 24-ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் ஜி அலெக்ஸ் பென்சிகர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொரோனா வைரஸ் பாதிப்பு வாய்ப்புள்ளதால், ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ-க்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று கோரியுள்ளார்.

இந்தமனு வரும் 12-ஆம் தேதி நீதிபதிகள் எம் எம் சுந்த்ரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய பிரிவு பெஞ்ச் முன் வர வாய்ப்புள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட மனுவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் பெரிய தொற்று நோயை உருவாக்கியுள்ளது. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பழமையான போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் இத்தாலி கூட்டமைப்பு லீக் போட்டிகளும் கொரோனா வைரஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்தார்.

இதனால், ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ அமைப்பை அனுமதிக்கக் கூடாது என்று கோரி அதிகாரிகளுக்கு, பிரதிநிதிகளும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக மனுதாரர் தெரிவித்தார்.

தனது கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லாததால், நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் மனுதாரர் கூறினார்.