சென்னை:  கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி இன்று முதல்  விளையாட்டு மைதானங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் 7வது கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மார்ச் 24ந்தேதி அறிவிக்கப் பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்த நிலையி லும், இன்னும் பொழுதுபோக்கு பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை செயல்பட இதுவரை தமிழகஅரசு அனுமதி வழங்கப்படவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் (ஜூலை) 25ந்தேதி முதல்,  விளையாட்டு வீரர், வீரங்கனைகள்  பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.  தமிழகத்தில் சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம். 15 வயதிற்குள், 50 வயதுக்கு  மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட அனுமதி இல்லை. 15 முதல் 50 வயதிற்குள்ள வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயிற்சியில் ஈடுபடவும் தமிழக அரசு  வலியுறுத்தப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களில் பயிற்சிக்கான தடை தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறை களையும் தமிழக அரசு  வெளியிட்டது.

இந்த நிலையில், ஆகஸ்டு 10ந்தேதி (இன்று) முதல் சிறிய கோவில்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதுடன்,  பார்வையாளர்கள் இன்றி, இன்று முதல் விளையாட்டு மைதானங்கள் செயல்படவும் தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.