பிரபல பின்னனி பாடகியான சுசித்ராவை காணவில்லை என அவரது சகோதரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து பாகப் பிரிவினை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக தனது சகோதரி சுஜிதா வீட்டில் வசித்து வந்த சுசித்ரா, பிரபல பின்னனி பாடகியாவார். சமூகவலைதளத்தில் பல நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் வெளியிட்டு, திரையுலகில் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார். அப்போது அவருக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை இருப்பதாக அவரது கணவர் கார்த்திக் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்னதாக சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக தனது சகோதரி வீட்டில் தங்கி, பல்வேறு சட்ட ரீதியிலான நகர்வுகளை மேற்கொண்டு வந்தார். சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இன்று காலை சகோதரி சுஜிதாவின் இல்லத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ள சுஜிதா, தன்னுடன் தங்கியிருந்த சுசித்ராவை காணவில்லை என்றும், சொத்து பிரிப்பதில் மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் சுசித்ரா கோபமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிசித்ராவின் சகோதரி சுஜிதா அளித்த புகார் மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]