சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. ஜூன் 1ந்தேதி முதலே தினசரி 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் சமீப நாட்களாக ஒரே நாளில் சாரிசாரியாக 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள “ஆன்டிபாடி” எனும் நோய் எதிர்ப்புசக்தியை பிரித்து எடுத்து கொரோனா பாதித்த நபருக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன்மூலம் அந்த நபர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவதுடன், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், சென்னை அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 6 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளதாகவும், 13 பேரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.