லண்டன்:

ஸ்டெர்லைட் ஆலை அதிபரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வால் டுவிட்டரில் ஓர வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘ துப்பாக்கிச் சூடு நடந்தது வருத்தம் அளிக்கிறது. வேதனையாகவும் உள்ளது. இது எதிர்பாராத ஒன்றாகும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மூடப்பட்டுள்ளது. ஆலையை திறக்க நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அரசு, நீதிமன்ற உத்தரவுகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. தமிழகம், தூத்துக்குடி வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் உதவியாக இருப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]