இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லாண்டர் ஆய்வுக் களம் இந்திய நேரப்படி நாளை மாலை 6:04 மணிக்கு சந்திரனில் தரையிறங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விக்ரம் லேண்டர் நிலவில் கால்பதிக்கவிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை கோடிக்கணக்கான இந்தியர்கள் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

அதேவேளையில், லேண்டரில் ஏதாவது கோளாறுகள் கண்டறியப்பட்டாலோ அல்லது தரையிறங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லையென்றாலோ, தரையிறக்கத்தை ஆகஸ்ட்-27ம் தேதிக்கு ஒத்தி வைக்கவும் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோவின் அகமதாபாத் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி நிலேஷ் எம் தேசாய் தெரிவித்துள்ளார்.

நாளையே சந்திரயான் 3 தரையிறக்கப்படுமா அல்லது ஆகஸ்ட்-27க்குத் தள்ளி வைக்கப்படுமா என்பது, நாளைய தரையிறக்கத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.