காத்மாண்டு: நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அதில் 19 பேர் பயணம் செய்த நிலையில் பைலட் மட்டுமே அதிர்ஷ்டவமாக உயிர் தப்பி உள்ளார். மற்ற 18 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேபாளம் தலைநகர் காட்மண்டு அருகே உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் 19 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் சில ம் விழுந்து நொறுங்கியது. இன்று காலை 19 பயணிகளுடம் சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் பொக்காரா என்கிற ரிசார்ட் நகருக்கு செல்ல இருந்தது. இந்த விமானம் மேலேற ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்த போதே, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதன் ஓடுபாதையிலிருந்து சறுக்கி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த விமானம் திப்பற்றி எரியத் தொடங்கியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
விசாரணையில், அந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து வேகமாக மேலே எழ முயன்றதால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் கீழே விழுந்த உடனேயே விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அதில் பயணித்த பைலட் தவிர மற்ற 18 பேரும் கருகி உயிரிழந்ததுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கீழே விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்து சாம்பலான நிலையில் அதில் பயணித்த 18 பேர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.